கடந்த வியாழக்கிழமை, மலைப்பாதை வழியாகச் சென்ற பொதுமக்கள் பள்ளத்தின் புதருக்குள் சடலம் கிடப்பதைப் பார்த்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். 15 முதல் 30 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் இருந்த சடலம், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினரின் உதவியுடன் மீட்கப்பட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பப்பட்டது.
சிறுமியின் அடையாளம் குறித்து விசாரணை
சிறுமி சாம்பல் நிற ஜெர்கினும், கத்திரிப்பூ நிற கவுனும் அணிந்திருந்தார். அந்தக் கவுனில் கடையின் பெயர் மற்றும் விலை விவரங்கள் அடங்கிய ஸ்டிக்கர் பிரிக்கப்படாமல் இருந்தது. உடலில் பெரிய வெளிக்காயங்கள் எதுவும் காணப்படவில்லை என்றாலும், அவர் ஓரிரு நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டு அங்கு வீசப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை நடைபெறுகிறது.
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இருந்து காணாமல் போன சிறுமியுடன் அடையாளங்களை ஒப்பிட்டுப் பார்த்தபோது, அந்தச் சிறுமி இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
அண்டை மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் பதிவான சிறுமிகள் காணாமல் போன வழக்குகள் சரிபார்க்கப்படுகின்றன. குப்பனூர் மலைப்பாதை சுங்கச்சாவடி மற்றும் சுற்றுப்புறங்களின் சிசிடிவி காட்சிகள் சேகரிக்கப்படுகின்றன. தொடர்புடைய துணிக்கடையையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
முழுமையான பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே மரணத்திற்கான துல்லியமான காரணம் தெரியவரும். Yercaud girl death investigation பணியில் ஏற்காடு, கொளத்தூர், ஓமலூர் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான 3 தனிப்படைகள் ஈடுபட்டுள்ளன.
































