சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

பாரிஸ் போக்குவரத்து – மெட்ரோ லைன் 14 தற்காலிகமாக நிறுத்தம்.

பாரிஸ் நகரில் நடைபெறும் மேம்பாட்டு மற்றும் பராமரிப்பு பணிகளின் காரணமாக மெட்ரோ லைன் 14 சேவை ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 5 அன்று காலை சேவை தொடக்கம் முதல் மதியம் 2:00 மணி வரை முழுமையாக நிறுத்தப்படும் என போக்குவரத்து நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த நேரத்தில் லைன் 14 வழியாக எந்த மெட்ரோ ரயிலும் இயக்கப்படாது. பயணிகள் சிரமமின்றி பயணம் தொடர்வதற்காக Gare de Lyon மற்றும் Olympiades நிலையங்களுக்கு இடையில் மாற்று பஸ் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், சாலை போக்குவரத்து நெரிசல் காரணமாக பயண நேரம் சாதாரணத்தை விட அதிகமாக இருக்கலாம் என்பதால் பயணிகள் முன்கூட்டியே தங்களின் பயணத்தை திட்டமிட பரிந்துரைக்கப்படுகிறது. மதியம் 2:00 மணிக்குப் பிறகு மெட்ரோ சேவை வழமையாக மீண்டும் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading