இந்த புதிய ID அட்டை ஒரு பாதுகாப்பு சிப்புடன் (biometric chip) வரவிருக்கிறது இதில் நபரின் முகதகவலும் (facial data) பாஸ்போர்டில் உள்ளதைப் போலவே குறியாக்கமாக (encrypted) சேர்க்கப்படும்.
இந்த அடையாள அட்டையைத் தொட்டால்தான் சிபில் உள்ள தகவல்களை வாசிக்க முடியும். மேலும், அந்த தகவல்களை வாசிக்கக்கூடிய சிஸ்டம்கள் EU/EFTA தரச்சான்று பெற்ற பாதுகாப்பான உபகரணங்களால் மட்டுமே அனுமதிக்கப்படும்.
இதனால் தனிநபர் தனியுரிமை மிக உயர்ந்த பாதுகாப்புடன் காப்பாற்றப்படும்.
இந்த புதிய அட்டையினை கொண்டு வருவதற்கான காரணம்?
- தற்போதைய ஸ்விஸ் ID அட்டையில் பயோமெட்ரிக் தரவுகள் இல்லை.
- EU தரத்துடன் ஒத்துவரும் பாதுகாப்பு அடையாள அட்டைகள் தேவைப்படுகின்றன.
- பிற நாட்டு பாதுகாப்பு அமைப்புகளுடன் ஒத்துழைக்கும் போது மேம்பட்ட அடையாள பரிசோதனை அவசியமானதாகியுள்ளது.
AFIS 2026 திட்டம்
புதிய ID-க்கு துணையாக, “AFIS 2026” எனப்படும் புதிய சுய அடையாள சிஸ்டமும் அறிமுகமாகும். இதில்
- கைரேகை (fingerprints),
- கைஅடி (palm prints),
- முக ஒப்பீடு (facial recognition)
மூன்றையும் ஒரே இடத்தில் சேமித்து, போலீஸ் மற்றும் குடிவரவியல் அதிகாரிகள் பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பம் உருவாகிறது.
சட்டப் பாதுகாப்பு
இந்த பயோமெட்ரிக் ID கட்டாயமல்ல. ஒருவர் விருப்பப்பட்டால் மட்டுமே அந்தத் தரவுகள் சேமிக்கப்படும். மேலும், சேமிக்கப்பட்ட தரவுகள் பாதுகாப்பான முறையில் பாதுகாக்கப்படும் என சுவிஸ் அரசு உறுதியளிக்கிறது.


































