Month: July 2026
நீர்கொழும்பு கோர விபத்து, – மினுவாங்கொட வீதியின் போலவலாண பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் அதிவேகமாக பந்தயத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் திரும்பிக் கொண்டிருந்த பிரைம் மூவர் (Prime Mover) வாகனத்தின் இழுவையுடன் (Trailer) மோதியதில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் நீர்கொழும்பு தாகொன்ன பகுதியைச் சேர்ந்த 18 வயதான தலிஷ நிம்னெத் சிறிவர்தன மற்றும் 19 வயதான கவிது ஹஷான் சோமதிலக்க என அடையாளம் காணப்பட்டுள்ளனர். விபத்தின் தாக்கம் மிகக் […]
பிரான்சில் இந்த கோடைக்காலத்தில் தொடர்ச்சியாக பதிவாகி வரும் கடும் வெப்பநிலைக்கு மத்தியில் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் மேலும் ஒரு புதிய வெப்ப அலை (Canicule) உருவாகும் வாய்ப்பு இருப்பதாக வானிலை முன்னறிவிப்புகள் தெரிவிக்கின்றன. ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஏற்கனவே பல வெப்ப அலைகளை சந்தித்துள்ள பிரான்ஸ் தற்போது நான்காவது கடும் வெப்ப அலைக்குள் இருப்பதாகவும் அதன் பின்னர் ஆகஸ்ட் முதல் வாரத்திலும் வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக நீடிக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பிரான்சில் இந்த […]
யாழில் கஞ்சா கடத்தல், யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 16 கிலோகிராம் கேரள கஞ்சா பொதிகளை யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசேட நடவடிக்கையின் மூலம் கைப்பற்றியுள்ளனர். சுமார் 20 லட்சம் ரூபாய் பெறுமதியான இந்த போதைப்பொருள் தொகை வடமராட்சி அரச புலனாய்வுச் சேவை (SIS) வழங்கிய இரகசிய தகவலின் அடிப்படையில் மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. விசாரணைகளின் ஆரம்பக் கட்ட தகவல்களின்படி இந்த சட்டவிரோத கேரள கஞ்சா […]
இம்ரானின் நிதிப் பொறுப்பாளர் கைது, மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ள தனுஷ்க கௌசல்யா எனப்படும் ‘ரத்மலானே சைமா’ பாதாள உலகக் குற்றவாளி கஞ்சிபானி இம்ரானின் நிதிப் பொறுப்பாளராக நீண்டகாலமாக செயல்பட்டிருந்தமை காவல்துறை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இலங்கை மற்றும் மலேசிய காவல்துறையினர் இணைந்து முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் போது சைமா உட்பட மூவர் அண்மையில் கைது செய்யப்பட்டனர். விசாரணைகளில் கஞ்சிபானி இம்ரானின் அனைத்து நிதி பரிவர்த்தனைகளையும் சைமாவே கையாள்ந்ததுடன் அவரது சமூக ஊடக நடவடிக்கைகளையும் ஒருங்கிணைத்திருந்ததாக தெரியவந்துள்ளது. மேலும் […]
சவுதி கடல்சார் பாதுகாப்பு கூட்டணி, சிவப்பு கடல் மற்றும் பாப் அல் மந்தப் (Bab el-Mandeb) கடற்பாதைகளில் அதிகரித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் நோக்கில் சவுதி அரேபியா தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள பன்னாட்டு கடல்சார் பாதுகாப்பு கூட்டணியில் தற்போது 43 நாடுகள் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரியாத்தில் நடைபெற்ற உயர்மட்ட இராணுவ ஆலோசனைக் கூட்டத்தில் பல நாடுகளின் இராணுவத் தலைமை அதிகாரிகள் கலந்து கொண்டு கடல்சார் பாதுகாப்பு, சர்வதேச வர்த்தகக் கப்பல்களின் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவது […]
உடற் சிகிச்சை நிபுணர் கொலை, நுவரெலியாவில் உடற் சிகிச்சை நிபுணர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் அவரது மனைவி மற்றும் குற்றத்திற்கு துணைபுரிந்ததாகக் கூறப்படும் மேலும் இருவர் உள்ளிட்ட நால்வரின் விளக்கமறியல் எதிர்வரும் ஆகஸ்ட் 3 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த நால்வரும் இன்று (30) நுவரெலியா நீதவான் நீதிமன்றில் சிறைச்சாலை அதிகாரிகளால் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார். விளக்கமறியலில் உள்ளவர்கள் நாரம்மல […]
அஸ்வெசும கொடுப்பனவு, நலன்புரித் திட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான 2026 ஜூலை மாத கொடுப்பனவு நாளை (31) பயனாளிகளின் அஸ்வெசும வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. இதன்படி முதற்கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 621,638 முதியோர்களுக்காக 3,108,190,000 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேவேளை இரண்டாம் கட்டத்தின் கீழ் 77,324 முதியோர்களுக்காக 386,620,000 ரூபாய் வைப்பிலிடப்படவுள்ளது. இதன் மூலம் இரண்டு கட்டங்களிலும் மொத்தமாக 698,962 பயனாளிகளுக்கு 3,494,810,000 ரூபாய் வழங்கப்படவுள்ளது. தகுதியுடைய […]
ஸ்பெயின் குடியுரிமை யைப் பெற விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு கிடைக்கும் நான்கு அதிகாரப்பூர்வ வழிகளை அரசு மீண்டும் விளக்கியுள்ளது. இந்த நடைமுறைகளின் மூலம் குடியுரிமை பெற்றவர்கள் சிவில் பதிவேட்டில் Civil Register பதிவு செய்யப்பட்ட பின்னர் தேசிய அடையாள அட்டையும் (DNI) கடவுச்சீட்டையும் பெற தகுதி பெறுவார்கள். அதிகம் பயன்படுத்தப்படும் வழி சட்டபூர்வமாக ஸ்பெயினில் குறிப்பிட்ட காலம் வசித்து அதன் அடிப்படையில் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதாகும். தேவையான வசிப்பு காலம் விண்ணப்பதாரரின் சூழ்நிலையைப் பொறுத்து மாறுபடும். பொதுவாக 10 ஆண்டுகள் […]
ஜெர்மனி விசா வகைகள், கல்வி குடும்ப இணைவு அல்லது நீண்டகால குடியேற்றம் போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக செல்ல விரும்புபவர்கள் தங்களது பயண நோக்கத்திற்கு ஏற்ப சரியான விசாவை விண்ணப்பிக்க வேண்டும் என அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்கள் தெரிவிக்கின்றன. ஜெர்மனிக்கான விசா தேவைகள் விண்ணப்ப நடைமுறைகள் மற்றும் தகுதிகள் குறித்து புதுப்பிக்கப்பட்ட தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுவாக 90 நாட்கள் வரை தங்கும் சுற்றுலா வணிகம் அல்லது குடும்ப வருகைகளுக்காக Schengen Visa வழங்கப்படுகிறது. அதற்கு மேல் தங்கவோ அல்லது வேலை […]
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ITAK, திருகோணமலை மாவட்டத்தின் மூத்த உறுப்பினரும் மொரவாவே பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான இராஜமணி அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வு குடும்பத்தினர், உறவினர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் பங்கேற்புடன் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இறுதி அஞ்சலி நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளை உப தலைவர் விஜயநாதம் விஜயகுமார் நேரில் கலந்து கொண்டு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதுடன் மறைந்த இராஜமணி அவர்கள் தமிழ் மக்களின் அரசியல் மற்றும் சமூக […]