சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

இம்ரானின் நிதிப் பொறுப்பாளர் கைது, மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ள தனுஷ்க கௌசல்யா எனப்படும் ‘ரத்மலானே சைமா’ பாதாள உலகக் குற்றவாளி கஞ்சிபானி இம்ரானின் நிதிப் பொறுப்பாளராக நீண்டகாலமாக செயல்பட்டிருந்தமை காவல்துறை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இலங்கை மற்றும் மலேசிய காவல்துறையினர் இணைந்து முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் போது சைமா உட்பட மூவர் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.

விசாரணைகளில் கஞ்சிபானி இம்ரானின் அனைத்து நிதி பரிவர்த்தனைகளையும் சைமாவே கையாள்ந்ததுடன் அவரது சமூக ஊடக நடவடிக்கைகளையும் ஒருங்கிணைத்திருந்ததாக தெரியவந்துள்ளது. மேலும் கஞ்சிபானியின் அறிவுறுத்தலின் பேரில் கடந்த ஆண்டு கெஹல்பத்ர பத்மே மலேசியாவில் பதுங்கியிருக்க உதவியதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

தற்போது பிரான்சில் தலைமறைவாக உள்ள குடு அஞ்சுவின் நெருங்கிய கூட்டாளியாக இருந்த சைமா பின்னர் கஞ்சிபானி இம்ரானுடன் இணைந்ததாகவும் குடு அஞ்சுவால் உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த நட்பு உருவானதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பே சைமா மலேசியாவுக்கு தப்பிச் சென்றிருந்ததாகவும் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Recent posts

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்