விசாரணைகளின் ஆரம்பக் கட்ட தகவல்களின்படி இந்த சட்டவிரோத கேரள கஞ்சா தொகை நாளைய தினம் கொழும்பு பகுதிக்கு கடத்தப்படவிருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், இந்த போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பின் பின்னணியில் பிரபல அரசியல் கட்சியொன்றின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவருக்கும் தொடர்பு இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தை விசாரணை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். அந்த கோணத்திலும் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில் அண்மையில் இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக பருத்தித்துறை வல்லிபுரம் கடற்கரை வழியாக 250 கிலோகிராமுக்கும் அதிகமான கேரள கஞ்சா நாட்டிற்குள் கடத்தப்பட்டதாக கிடைத்த தகவல்களில் தற்போது கைப்பற்றப்பட்ட 16 கிலோகிராம் போதைப்பொருள் அதில் ஒரு சிறு பகுதி மட்டுமே எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் காவல்துறையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.




























