Tag: Drug Trafficking
போதைப்பொருள் கும்பல் தலைவன் கைது, பிரான்ஸின் மார்செய் நகரை மையமாகக் கொண்டு செயல்படும் சக்திவாய்ந்த போதைப்பொருள் குற்றவியல் அமைப்பான DZ Mafia வின் முக்கிய தலைவராக சந்தேகிக்கப்படும் மெஹ்தி லரிபி அல்ஜீரியாவில் கடந்த ஜூலை மாத இறுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை பிரான்ஸ் நீதித்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். பிரான்ஸ் நீதிபதிகள் முன்னெடுத்து வரும் Octopus எனப்படும் மிகப்பெரிய போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் விசாரணையின் ஒரு பகுதியாகவே இவருக்கு எதிராக சர்வதேச கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. […]
யாழில் கஞ்சா கடத்தல், யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 16 கிலோகிராம் கேரள கஞ்சா பொதிகளை யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசேட நடவடிக்கையின் மூலம் கைப்பற்றியுள்ளனர். சுமார் 20 லட்சம் ரூபாய் பெறுமதியான இந்த போதைப்பொருள் தொகை வடமராட்சி அரச புலனாய்வுச் சேவை (SIS) வழங்கிய இரகசிய தகவலின் அடிப்படையில் மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. விசாரணைகளின் ஆரம்பக் கட்ட தகவல்களின்படி இந்த சட்டவிரோத கேரள கஞ்சா […]
Sri Lanka Shooting Incidents, இந்த ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் நாடு முழுவதும் 21 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் அவற்றில் 14 பேர் உயிரிழந்தும் 12 பேர் காயமடைந்தும் இருப்பதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அண்மையில் மூன்று மணி நேர இடைவெளிக்குள் தெமட்டகொடை மற்றும் வத்தளை பகுதிகளில் இடம்பெற்ற இரண்டு தனித்தனி துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பாதுகாப்பு தொடர்பான கவலைகளை மேலும் அதிகரித்துள்ளன. வத்தளையில் நடைபெற்ற சிறுவர் பிறந்தநாள் விழாவில் இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன் விசாரணையில் […]
கொழும்பு நவகமுவ காவல்துறை பிரிவுக்குட்பட்ட கொரதொட வந்துரம்முல்ல சமனல உயன பகுதியில் நேற்று (16) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கடுவெல பகுதியைச் சேர்ந்தவர் என காவல்துறை தெரிவித்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த அவர் முதலில் நவகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய தரப்புகளுக்கிடையிலான தகராறின் விளைவாக ஏற்பட்டிருக்கலாம் […]
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற வன்முறை மோதல் தொடர்பாக ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி வரும் தகவல்கள்,இதன் பின்னணியில் ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பின் தொடர்பு இருக்கக்கூடும் என்ற சந்தேகங்களை வலுப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சக்திவாய்ந்த அரசியல் ஆதரவுடன் செயல்பட்டதாகக் கூறப்படும் குற்றக் கும்பல்கள் மற்றும் போதைப்பொருள் வலையமைப்புகளுக்கு எதிராக முந்தைய காலங்களில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த போதிலும், நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட இந்த மோதல் கடந்த காலங்களில் பதிவான சம்பவங்களிலிருந்து வேறுபட்டதாக […]
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (05) மதிய வேளையில் இரு கைதிகள் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வன்முறை மோதல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதலைத் தொடர்ந்து பெண் கைதிகள் குழுவொன்று சிறைச்சாலையின் கூரையின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதுடன் பின்னர் ஆண் கைதிகள் குழுவும் கூரையில் ஏறி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவத்தில் இரு கைதிகள் உயிரிழந்துள்ளதுடன் 35 பேர் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் படுகாயமடைந்த இருவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு […]
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கான பிரத்தியேக சட்டமூலம் இன்னும் இரு மாதங்களுக்குள் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்படும் என்றும் பாதாளக்குழுக்களுக்கு ஆதரவளித்த அரசியல் தரப்பினர் இந்த சட்டமூலத்தை எதிர்ப்பது ஆச்சரியமல்ல என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார். கொழும்பில் இன்று (01) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையிலேயே சுரேஸ் சலே கைது செய்யப்பட்டதாக கூறினார். […]
போதைப்பொருள் சோதனைஇலங்கையின் தெரணியகல பகுதியில் போதைப்பொருள் தடுப்பு சோதனை நடவடிக்கையின் போது பொலிஸாருக்கும் சந்தேகநபர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் நான்கு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்ததுடன் நான்கு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் மேற்கொண்ட போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் போது சந்தேகநபர்கள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த மோதல் ஏற்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
France Crime Newsபிரான்சின் Montmorency நகரில் உள்ள ஒரு சமூக குடியிருப்பில் 32 கிலோ கஞ்சா, ஆயுதங்கள் வெடிமருந்துகள் மற்றும் பெருமளவு பணம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு வசித்த குடும்பம் அதிகாரப்பூர்வமாக வெளியேற்றப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை வால்-தொய்ஸ் (Val-d’Oise) மாகாண நிர்வாகம் காவல்துறை மற்றும் சமூக வீட்டு நிர்வாகத்தின் ஒருங்கிணைந்த நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டது. அதிகாரிகளின் தகவலின்படி 2025 ஆம் ஆண்டு ஜனவரியில் நடத்தப்பட்ட சோதனையின் போது அந்த குடியிருப்பு போதைப்பொருள் சேமிப்பு மையமாக (“nourrice”) பயன்படுத்தப்பட்டதாக கண்டறியப்பட்டது. […]
தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்வியியற் கல்லூரி மாணவர்களை இலக்கு வைத்து நீண்டகாலமாக ‘ஐஸ்’ போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த தம்பதிகள் உட்பட மூவர் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்மாந்துறை பொலிஸ் ஊழல் ஒழிப்புப் பிரிவிற்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த கைது இடம்பெற்றது. கைது செய்யப்பட்ட தம்பதியினர் நிந்தவூர் அட்டப்பளம் பகுதியைச் சேர்ந்த 34 மற்றும் 42 வயதுடையவர்களாகும். இவர்கள் கடந்த ஆறு மாதங்களாக சம்மாந்துறை 40 வீட்டுத்திட்டப் […]