இந்த சம்பவத்தில் நான்கு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்ததுடன் நான்கு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் மேற்கொண்ட போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் போது சந்தேகநபர்கள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த மோதல் ஏற்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.






























