பிரான்ஸ் நீதிபதிகள் முன்னெடுத்து வரும் Octopus எனப்படும் மிகப்பெரிய போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் விசாரணையின் ஒரு பகுதியாகவே இவருக்கு எதிராக சர்வதேச கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. லரிபி மீது போதைப்பொருள் கடத்தல் குற்றவியல் அமைப்பை வழிநடத்தல் பணமோசடி மற்றும் குற்றச்சதி உள்ளிட்ட பல்வேறு கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இக்குற்றங்களில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் பிரான்சில் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படலாம்.
அல்ஜீரிய மற்றும் பிரெஞ்சு இரட்டைக் குடியுரிமை கொண்டவரான லரிபியை அல்ஜீரியா பிரான்ஸிடம் ஒப்படைக்க முடியாது. இருப்பினும் அவர்மீது அல்ஜீரியாவிலேயே சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த கைது மார்ச் மாதத்தில் தென் பிரான்சில் 900 க்கும் மேற்பட்ட ஜென்டார்ம்கள் ஈடுபட்டு நடத்தப்பட்ட Operation Octopus நடவடிக்கையின் தொடர்ச்சியாக பார்க்கப்படுகிறது. அந்த நடவடிக்கையில் பல முக்கிய குற்றச்சாட்டு நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். பிரான்ஸ் மற்றும் அல்ஜீரியாவுக்கு இடையிலான நீதித்துறை ஒத்துழைப்பில் இது முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.



























