கொழும்பு நவகமுவ காவல்துறை பிரிவுக்குட்பட்ட கொரதொட வந்துரம்முல்ல சமனல உயன பகுதியில் நேற்று (16) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கடுவெல பகுதியைச் சேர்ந்தவர் என காவல்துறை தெரிவித்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த அவர் முதலில் நவகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய தரப்புகளுக்கிடையிலான தகராறின் விளைவாக ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் காணவும் துப்பாக்கிச் சூட்டிற்கான துல்லியமான காரணத்தை உறுதிப்படுத்தவும் மேலதிக விசாரணைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.













Leave a Reply