Bellanwila shooting, கொழும்பு பொரலஸ்கமுவ காவல்துறை பிரிவிற்குட்பட்ட பெல்லன்வில பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் விடுமுறை விடுதியின் உரிமையாளரான 55 வயதுடைய தொழிலதிபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். காயமடைந்த அவர் உடனடியாக களுபோவில போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவம் நிகழ்ந்த வேளையில் குறித்த தொழிலதிபர் தனது விடுதிக்கு முன்பாக நின்றுகொண்டிருந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட நபர்கள் யார் என்பது அல்லது எந்த வகை துப்பாக்கி பயன்படுத்தப்பட்டது என்பது தொடர்பாக இதுவரை தகவல் வெளியாகவில்லை. சம்பவம் குறித்து பொரலஸ்கமுவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.













Leave a Reply