கொழும்பு வத்தளை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பள்ளியவத்தையில் மட்டக்குளிய பாலம் அருகே அமைந்துள்ள ஒரு விழா மண்டபத்தில் இன்று (23) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குழந்தையின் பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவத்திற்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில் குற்றவாளிகளை கைது செய்வதற்கும் துப்பாக்கிச் சூட்டின் பின்னணி குறித்து கண்டறிவதற்கும் வத்தளை காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.













Leave a Reply