காலி பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது சுமார் 3,000 போதை மாத்திரைகள் மற்றும் ஒரு இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக மருந்துப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் காலி காவல்துறையின் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் குறித்த வீட்டை சோதனையிட்டனர்.
இதன்போது பெருமளவிலான போதை மாத்திரைகள் மற்றும் பணம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆரம்பக்கட்ட விசாரணைகளில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒரு தனியார் மருந்தகத்தில் பணிபுரிபவர் என்பதும் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.





Leave a Reply