சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

கொள்ளுப்பிட்டியில் வெளிநாட்டுப் பெண்களை பயன்படுத்தி நடத்தப்பட்ட சட்டவிரோத ஆயுர்வேத மசாஜ் மையத்தை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.

குறித்த நடவடிக்கையில், மூன்று நாடுகளைச் சேர்ந்த பத்து பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், ஒரு பெண்ணிடமிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், காலி வீதியில் உள்ள அந்த விடுதியை போலீசார் முறையாகச் சுற்றிவளைத்ததாகவும், அதில் மூன்று வியட்நாம், ஆறு தாய்லாந்து மற்றும் ஒரு சீனப் பெண் கலந்து இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் 25 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள் என கூறப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading