கம்பஹா காவல் நிலையத்தின் குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோத பொருட்கள் கையிருப்பில் வைத்திருந்த நபர் ஒருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக, இவர் மூன்று இலட்சம் ரூபாயை இலஞ்சமாக பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.





Leave a Reply