சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

குச்சவெளி பிரதேச சபைத் தலைவர் முபாரக்கின் உத்தியோகபூர்வ அலுவலக அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

நேற்று  (16.12.2025) மாலை 7.00 மணிக்கு திருகோணமலை பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளரால், கிழக்கு மாகாண பிரதம செயலாளரின் ஆலோசனைக்கு அமைய அலுவலக அறை சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் இலஞ்சம் பெற்றார் என்ற குற்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரதேச சபைத் தலைவர் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

அறைக்கு சீல்

இந்நிலையில் அவர் இன்று (17.12.2025) பிரதேச சபையின் இந்த வருட வரவு செலவு திட்டத்தை முன்வைக்க சபைக்கு வர உள்ளார்.

இந்த சூழலில் வழக்கு விசாரணை முழுமையாக முடியவில்லை என்பதால் அவரது உத்தியோகபூர்வ அலுவலகத்திற்குள் அவர் செல்வதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் பிரதேச சபைத்தலைவர் தமது கடமைகளை ஆற்ற தற்காலிகமாக வேறு ஒரு அறையை அவருக்கு வழங்கும்படி சபையின் செயலாளருக்கு உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பணித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading