சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

உள்ளூராட்சி மன்ற அதிகாரங்களை வலுவிழக்கச் செய்து மக்களின் ஜனநாயக பிரதிநிதிகளை செயற்பட விடாமல் தடுப்பதற்கு தேசிய மக்கள் சக்தி கிராம அபிவிருத்தி குழு தலைவர் என்ற பதவியை பிரதேச செயலாளர் ஊடாக நியமனக் கடிதம் வழங்கப்பட்டு நியமிக்கப்படுவதாக பிரதேச சபை தவிசாளர்களால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பிரஜா சக்தி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக கூறி முழு நாட்டையும் முழு கிராமத்தின் அதிகாரங்களை தேசிய மக்கள் சக்தியிடம் வலிந்து இழுக்கும் நோக்குடன் இந்த அரசியல் நியமனம் வழங்கப்படுகிறது எனவும் கூறப்பட்டுள்ளது.

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

குறித்த விடையம் தொடர்பில் கருத்து தெரிவித்த வலி கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் உள்ளூராட்சி மன்ற சட்டங்களின் பிரகாரம் ஒரு நியாயமான தேர்தல் மூலம் மக்கள் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்துள்ள நிலையில் அதற்கு மேலதிகமாக அதிகாரம் வழங்கப்பட்ட கட்சி சார்பு கிராமட்ட தலைவர் ஒருவரை நியமிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது.

உள்ளூராட்சி மன்ற அதிகாரங்கள்

உள்ளூராட்சி மன்ற அதிகாரங்கள் பலப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் உள்ளூராட்சி மன்றங்களை மலினப்படுத்தி சர்வாதிகார ஆட்சியை கொண்டு பலப்படுத்துவதற்கு தேசிய மக்கள் சக்தியினர் போட்ட திட்டமே கிராம அபிவிருத்தி குழு.

இலங்கை வரலாற்றில் அரசியல் கட்சிகள் தொழிற்சங்கங்களுடாக தமது அரசியல் செயற்பாடுகளை மேற்கொண்டு வந்த வரலாறுகள் மாறி தேசிய மக்கள் சக்தியினர் கிராமங்களில் தமது அரசியலை மேற்கொள்வதற்காக உள்ளூராட்சி மன்ற அதிகாரங்களை கட்டுப்படுத்த முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

குறித்த நியமனம் தொடர்பில் நாம் விரிவாக ஆராய்ந்து நீதிமன்றத்தை நாடுவதற்கு சகல நடவடிக்கைகளையும் எடுக்கப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Gallery
Gallery

Leave a Reply

Recent posts

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்