சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

பதுளை ஹாலிஎல மொறகொல்ல புதிய வீடமைப்புத் திட்டத்திற்காக அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஹாலிஎல பிரதேச சபைத் தலைவர் பிரியந்த வருஷமான தலைமையில் நேற்று (13) இடம்பெற்றது.

2011 ஆம் ஆண்டு மொறகொல்லவத்தை மண்சரிவு காரணமாக இடம்பெயர்ந்த குடும்பங்களுக்காக இந்த வீடமைப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப் படுவதுடன், இதில் 54 வீடுகள் நிர்மாணிக்கப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் 164 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அதன்படி 54 வீடுகளுக்காக 142 மில்லியன் ரூபாய் மின்சாரம் நீர் மற்றும் வீதி அமைப்பு நடவடிக்கைகள் என உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்திக்காக 22 மில்லியன் ரூபாய் வீதம் ஒதுக்கிடப்பட்டுள்ளது. 

தற்போதைய அரசாங்கத்தின் வளமான நாடு அழகான வாழ்க்கை என்பதை கட்டியெழுப்பும் நோக்கில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்னவின் வழிகாட்டலின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும்  இத்திட்டம் பதுளை மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவர்தனவின் ஆலோசனைக்கு ஏற்ப ஹாலிஎல பிரதேச செயலாளரின் மேற்பார்வையின் கீழ் மேற்கோள்ளப்படவுள்ளது.

அடிக்கல் நாட்டும் நிகழ்வில் ஹாலிஎல  பிரதேச சபையின் உப தலைவர் உட்பட அங்கத்தவர்கள் ஹாலிஎல பிரதேச செயலாளர் சமிந்த வீரசிங்க பதுளை மாவட்ட உதவி மாவட்ட செயலாளர் சஜித் நாமல் உட்பட்ட பல அதிதிகள் வீட்டுத் திட்டப் பயனாளிகள் என பலர் பங்கேற்றனர்.

பதுளை மாவட்ட ஊடகப் பிரிவு.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்