சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

யாழ் மாவட்டத்தில் உள்ளக விளையாட்டு அரங்கினை நிர்மாணிக்க அமைச்சினால் ஒதுக்கப்பட்ட சுமார் 169 மில்லியன் ரூபாய் செலவு செய்யப்படாமல், கட்டடங்கள் திணைக்களத்திற்கு மாற்றப்பட உள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் (26) யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலில் உள்ளக விளையாட்டு அரங்கு தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிமன்ற தீர்ப்பு
உள்ளக விளையாட்டு அரங்கிற்கான வழக்கு யாழ்ப்பாண நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால், வழக்கு நிறைவடையாமல் கட்டுமானங்களை மேற்கொள்ள முடியாத நிலையில், குறித்த நிதியை கட்டடங்கள் திணைக்களத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மருதலிங்கம் பிரதீபன் கூறியதாவது, “நீதிமன்ற தீர்ப்பில் கட்டுவதற்கான உத்தரவு கிடைக்குமாயின் வேலைகள் ஆரம்பிக்கப்படும். இல்லையெனில் மாற்றுக்காணி ஒன்றை தேர்வு செய்து, உள்ள விளையாட்டு அரங்கினை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.”

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்