சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

தெற்காசிய நாடுகளுக்கிடையில் நடைபெற்ற 18 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான கூடைப்பந்தாட்டப் போட்டியில் இலங்கை தேசிய அணிக்காக யாழ்ப்பாணம் திருக்குடும்ப கன்னியர் மடம் கல்லூரி மாணவி லூட்சி றெஜினஸ் தெரிவு செய்யப்பட்டு சிறப்பாகப் பங்கேற்றுள்ளார். வடமாகாண பாடசாலை மாணவி ஒருவர் தெற்காசிய மட்ட கூடைப்பந்தாட்டப் போட்டியில் இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்திய முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

இலங்கையில் நடைபெற்ற இந்த சர்வதேச போட்டியில் இந்திய அணியுடன் மோதிய இலங்கை அணி இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. இளம் வயதிலேயே தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் சாதனை படைத்துள்ள லூட்சி றெஜினஸின் இந்த முன்னேற்றம் வடமாகாண விளையாட்டு வரலாற்றில் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. இவரின் திறமையை மேம்படுத்துவதில் பயிற்சியாளர் தனுஷ் ராஜசோபனாவின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading