புதிய மாற்றங்களின் கீழ் குடியேற்றச் சட்டத்தில் வயது வந்தவர் என கருதப்படும் வரம்பு 18 இலிருந்து 21 ஆக உயர்த்தப்படுகிறது. இதனால் 21 வயது வரை இளைஞர்கள் தங்களது பெற்றோரின் குடும்ப இணைப்பு அடிப்படையில் ஸ்வீடனில் தொடர்ந்தும் தங்குவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள். மேலும் நாடுகடத்தல் உத்தரவு பெற்றிருந்தும் இன்னும் நாட்டை விட்டு செல்லாதவர்கள் புதிய குடியிருப்பு அனுமதி விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். ஏற்கனவே வெளியேறியவர்களுக்கும் குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் மீண்டும் விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்படவுள்ளது.
ஸ்வீடன் குடியேற்ற அமைச்சர் Johan Forssell இந்த மாற்றங்கள் கல்வி கற்று வேலை செய்து வரும் இளைஞர்களுக்கு நியாயமான தீர்வை வழங்கும் என தெரிவித்துள்ளார். அதேவேளை நாட்டின் மொத்த குடியேற்றக் கொள்கை தொடர்ந்து கடுமையாகவே இருக்கும் என்றும் அரசு வலியுறுத்தியுள்ளது. Sweden Immigration






























