2026 ஆம் ஆண்டுக்கான சமூக பாதுகாப்பு நிதியமைப்பு சட்டத்தின் (LFSS 2026) மூலம், குழந்தை பிறப்பு அல்லது தத்தெடுப்பு தொடர்பாக தாய் மற்றும் தந்தை இருவருக்கும் கூடுதல் பெற்றோர் விடுப்பு வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

இந்த புதிய விடுப்பு திட்டம் பிரான்ஸில் பிறப்பு விகிதம் குறைந்து வரும் சூழலில் குடும்ப வாழ்க்கையும் தொழில் வாழ்க்கையும் சமநிலையுடன் செல்ல வேண்டும் என்பதற்காகவும் குழந்தை பிறப்பின் போது ஆண்கள்-பெண்கள் இடையே சமத்துவத்தை மேம்படுத்தும் நோக்கத்துடனும் இந்த நடவடிக்கை கொண்டு வரப்பட்டுள்ளது.

2026 ஜனவரி 1 முதல் திட்டமிடப்பட்ட குழந்தை பிறப்பு அல்லது தத்தெடுப்பு தொடர்புடைய அனைத்து பெற்றோர்களும் இந்த கூடுதல் பெற்றோர் விடுப்புக்கு தகுதியுடையவர்கள். 2026 ஜனவரி 1 முதல் மே 31 வரை குழந்தை பிறந்தவர்களுக்கு, இந்த விடுப்பை 2026 ஆண்டு முடிவு வரை பயன்படுத்த அனுமதி வழங்கப்படும். இந்த விடுப்பு கட்டாயமானது அல்ல மேலும் நிறுவனத்தில் பணிபுரியும் கால அளவு (seniority) தொடர்பான எந்த நிபந்தனையும் இல்லை.

இந்த கூடுதல் பெற்றோர் விடுப்பு, தற்போது நடைமுறையில் உள்ள தாய்மை விடுப்பு மற்றும் தந்தை விடுப்பிற்கு கூடுதலாக வழங்கப்படும். ஒவ்வொரு பெற்றோரும் அதிகபட்சமாக 1 முதல் 2 மாதங்கள் வரை இந்த விடுப்பை பெற முடியும். பெற்றோர் இருவரும் ஒரே நேரத்தில் அல்லது மாறிமாறி இந்த விடுப்பை பயன்படுத்தலாம். ஒற்றை பெற்றோர் குடும்பங்களுக்கு, அதிகபட்சமாக 2 மாதங்கள் வழங்கப்படும்.

கூடுதல் பெற்றோர் விடுப்புக்கான ஊதிய ஈடு, பெற்றோரின் நிகர சம்பளத்தை (net salary) அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும்.

  • முதல் மாதத்திற்கு நிகர சம்பளத்தின் 70%
  • இரண்டாவது மாதத்திற்கு நிகர சம்பளத்தின் 60%
    இந்த ஊதிய ஈடு சமூக பாதுகாப்புத் துறையின் மூலம் வழங்கப்படும். இதற்கான விரிவான விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் குறித்து, அரசு தனித்தனி அமலாக்க ஆணைகள் (décrets) மூலம் அறிவிக்கப்படும்.
முக்கிய குறிப்பு

கூடுதல் பெற்றோர் விடுப்பு, தற்போது உள்ள பெற்றோர் விடுப்பை (Parental Leave) மாற்றாது. இது அதற்கு மேலதிகமாக வழங்கப்படும் ஒரு புதிய உரிமையாகும்.

Leave a Reply

Contact NS (Nerikkalam.Info)

வணக்கம்
உங்களுடைய அவசர தேவை கருதி நீங்கள் நிரோஷ் சந்துருவை தொடர்புகொள்ள விரும்புகிறீர்கள்,

Nirosh_Santhuru

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading