இந்த விமானம் 23,155 கிலோமீட்டர், அதாவது 12,503 கடல் மைல் தூரத்தை 24 மணி நேரம் 24 நிமிடங்களில் கடந்தது. இந்த சாதனை கின்னஸ் உலக சாதனை அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 மணி நேரத்துக்கும் மேலான வரலாற்றுப் பயணம்
விமானம் ஜூலை 27ஆம் தேதி உள்ளூர் நேரப்படி மாலை 5.27 மணிக்கு மெல்போர்னில் இருந்து புறப்பட்டது. மறுநாள் பிரான்ஸ் நேரப்படி காலை 9.51 மணிக்கு தூலூஸில் தரையிறங்கியது.
பயணத்தின் போது விமானம் பசிபிக் பெருங்கடலைக் கடந்து, லாஸ் ஏஞ்சல்ஸ் மீது பறந்தது. பின்னர் வட அமெரிக்காவையும் அட்லாண்டிக் பெருங்கடலையும் கடந்து, ஐக்கிய இராச்சியம் வழியாக தெற்கு பிரான்ஸை சென்றடைந்தது.
இந்தப் பயணம் Airbus longest commercial flight சாதனையை உருவாக்கும் இரண்டு மாத சோதனைத் திட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்றது. ஏர்பஸ் மற்றும் குவாண்டாஸ் இணைந்து மேற்கொண்ட இந்த திட்டம் ஜூன் 2, 2026 அன்று தொடங்கியது. சுமார் 23 மணி நேரம் நீளமான வர்த்தக விமானப் பயணங்களை மேற்கொள்ளும் திறனை பரிசோதிப்பதே இதன் முக்கிய நோக்கமாக இருந்தது.
குவாண்டாஸ் நிறுவனம் ஏற்கனவே 12 A350-1000ULR விமானங்களை ஆர்டர் செய்துள்ளது. அவற்றை 2027 ஏப்ரல் முதல் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. சிட்னி–லண்டன் வழித்தடத்தில் சுமார் 18,500 கிலோமீட்டர் தூரத்துக்கு, 22 மணி நேரம் வரை நீளும் பயணங்களை நடத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

































