கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் 934 மெகாவாட் திட்டங்கள்
விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, மொத்தம் 934 மெகாவாட் திறன் கொண்ட நான்கு பெரிய காற்றாலை மற்றும் சூரிய மின்சாரத் திட்டங்களை அமேசான் அறிமுகப்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் 234 மெகாவாட் காற்றாலைத் திட்டமும், 200 மெகாவாட் சூரிய-காற்றாலை இணைத் திட்டமும் அமைக்கப்பட உள்ளன. மத்தியப் பிரதேசத்தில் 300 மெகாவாட் சூரிய மின்சாரத் திட்டமும், ராஜஸ்தானில் 200 மெகாவாட் சூரிய மின்சாரத் திட்டமும் இடம்பெற்றுள்ளன.
இந்தத் திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்ததும், இந்தியாவில் அமேசானின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொகுப்பு 2 ஜிகாவாட்டைத் தாண்டும். இதன் மூலம் 35 லட்சத்துக்கும் அதிகமான இந்தியக் குடும்பங்களின் ஆண்டு மின்சாரப் பயன்பாட்டுக்கு சமமான மின்சாரம் உருவாகும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது இந்தியாவில் அமேசானுக்கு 57 புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்கள் உள்ளன. அவற்றில் 14 பெரிய காற்றாலை மற்றும் சூரிய மின்சாரத் திட்டங்களும், அதன் நிறுவன வளாகங்களில் உள்ள 43 சூரிய மின்சார அமைப்புகளும் அடங்கும். Amazon India renewable energy investment நடவடிக்கை, 2030க்குள் நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் கார்பன் தீவிரத்தை 2019 அளவுடன் ஒப்பிடுகையில் 65 சதவீதம் குறைக்கும் உலகளாவிய இலக்குக்கும் ஆதரவளிக்கிறது.
இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் புதிய எரிசக்தித் துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி, இந்த முதலீடு நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தும் என்றும், நிலையான பொருளாதார வளர்ச்சிக்கும் தூய்மையான எரிசக்திக்கான மாற்றத்துக்கும் உதவும் என்றும் கூறினார். உலகளாவிய செயல்பாடுகளில் 2040ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடைவதே அமேசானின் இலக்காகும்.
































