ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் பெல்ஜியம் கடற்கரைக்கு அருகே 570 பேர் தடுத்து நிறுத்தப்பட்டனர். கடந்த ஆண்டின் இதே காலத்தில் இந்த எண்ணிக்கை 102 ஆக இருந்தது. தடுத்து நிறுத்தப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஐக்கிய இராச்சியத்தை நோக்கிச் சென்றவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மனிதக் கடத்தலில் ஈடுபட்டதாக 69 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெல்ஜியம் கடற்கரையில் கண்காணிப்பு தீவிரம்
பிரான்ஸ் கடற்கரையில் காவல் நடவடிக்கைகள் அதிகரித்ததைத் தொடர்ந்து, கடத்தல்காரர்கள் பெல்ஜியக் கடற்கரையைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். பிரான்ஸ்-பெல்ஜியம் கடற்பரப்பில் நவம்பர் தொடக்கத்தில் 13 பேர் மீட்கப்பட்டனர். அவர்களில் இருவர் ஒரு சிறிய படகில் சிக்கியிருந்த நிலையில், பின்னர் மேலும் 11 பேர் கடலில் ஒரு மிதவையைப் பற்றியபடி கண்டுபிடிக்கப்பட்டனர்.
Belgium Channel Crossings அதிகரிப்பைத் தடுக்க, பிரிட்டன் 1.3 மில்லியன் பவுண்டுகளை பெல்ஜிய அதிகாரிகளுக்கு ஒதுக்கியுள்ளது. கடற்கரையை வாகனங்கள் மற்றும் படகு இழுவைகளுடன் அணுகுவதைத் தடுக்க கான்கிரீட் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இரவுக் கண்காணிப்பு, வெப்பப் படமெடுப்பு மற்றும் நிலம், கடல், வான்வழிப் patrolகளும் வலுப்படுத்தப்பட்டுள்ளன. ஃப்ரொன்டெக்ஸ் விமானங்களும் இதில் பயன்படுத்தப்படுகின்றன.
2026 நவம்பர் 13 வரை கடல் வழியாக சுமார் 23,500 பேர் இங்கிலாந்தை அடைந்துள்ளனர். இது 2025ஆம் ஆண்டின் அதே காலத்தைவிட கிட்டத்தட்ட 40 சதவீதம் குறைவு. எனினும், பிரான்ஸ் கடற்கரையிலிருந்து புறப்பட்டவர்களில் குறைந்தது 25 பேர் இந்த ஆண்டு கடலில் உயிரிழந்துள்ளனர்.
































