திரணகம கடற்கரையில் மீட்பு நடவடிக்கை
கடலில் குளித்துக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட வலுவான நீரோட்டத்தால் அந்தப் பெண் கரையிலிருந்து தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். அப்போது கடற்கரையில் பணியில் இருந்த பொலிஸ் உயிர்காப்புப் பிரிவு அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு அவரை மீட்டனர்.
இந்த மீட்பு நடவடிக்கையில் பொலிஸ் சார்ஜன்ட் திசாநாயக்க (38508), பொலிஸ் கான்ஸ்டபிள் மிஹிந்து (83255) மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் நிபுன் (98864) ஆகியோர் ஈடுபட்டனர்.
மீட்கப்பட்ட பெண்ணுக்கு ஆரம்பக்கட்ட முதலுதவி வழங்கப்பட்ட பின்னர், அவர் பாதுகாப்பாக உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். German tourist rescued in Hikkaduwa சம்பவம் தொடர்பாக, கடலில் குளிக்கும் போது வலுவான நீரோட்டம் ஏற்படும் பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அவதானமாக இருக்க வேண்டியது குறிப்பிடத்தக்கது.



























