விமான நிலைய நடைமுறைகள் மீறப்பட்டதா?
ரிக்கார்டோ லராண்டோ மெண்டோசா மற்றும் சோஃபியா ஹெர்னாண்டஸ் மெஜியா ஆகியோர் தந்தையும் மகளும் என அவர்களது வழக்கறிஞர் ஒலியா கட்டாலா தெரிவித்தார். இருவருக்கும் குற்றப் பின்னணி இல்லை என்றும், அவர்கள் சட்டபூர்வமான நடவடிக்கையை எதிர்கொண்டிருந்ததாகவும் அவர் கூறினார்.
அதிகாரிகள் சாதாரண உடையில், அடையாளத்தை வெளிப்படுத்தாமல் அணுகியதாக குடும்பத்தினர் கூறினர். மெஜியா அதிகாரிகள் மீது சூடான காபியை வீசியதாகவும், கூட்டாட்சி அதிகாரியைத் தாக்கிய குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்றும் ICE தெரிவித்தது. ஆனால், நேரில் பார்த்த ஜான் கேடெக்கி, அதிகாரிகள் பயணிகள் போல் தோன்றியதாகவும், கைது செய்யும்போது காபி சிந்தியதாகத் தான் கண்டதாகவும் கூறினார்.
சியாட்டில் துறைமுக நிர்வாகம் இந்தச் சம்பவம் குறித்து “மிகுந்த அதிருப்தி” தெரிவித்தது. அமலாக்க நடவடிக்கை குறித்து தங்களுக்கு முன்கூட்டியே தகவல் அளிக்கப்படவில்லை என்றும், நடைமுறைகள் மீறப்பட்டதா என உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையுடன் ஆய்வு நடத்துவதாகவும் தெரிவித்தது. அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனமும் உரிய முன்னறிவிப்பு கிடைக்கவில்லை என்றும், ஊழியர்கள் மற்றும் பயணிகள் பாதிக்கப்பட்டதாகவும் கூறியது.
Seattle airport ICE arrests குறித்து வாஷிங்டன் ஆளுநர் பாப் பெர்குசன், ICE கட்டுப்பாடின்றி செயல்படுவதாக விமர்சித்தார். சம்பவத்தால் விமானக் குழுவினரில் நால்வர் அந்த விமானத்தை இயக்க மறுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.































