பரவை வேலவெளிவீதி நான்காவது குறுக்குத் தெருவைச் சேர்ந்த பெரியசாமியின் மகன் சந்தோஷ், டிரைவராகப் பணியாற்றி வந்தார். அவருக்கு தாரணி என்ற மனைவியும், ஓர் ஆண் குழந்தையும் உள்ளனர்.
சொத்து தகராறு குறித்து காவல்துறை விசாரணை
சந்தோஷின் மாமனார் செந்தில்குமாருக்கும், அவரது சகோதரர்கள் கணேஷ் மற்றும் சிவகுமாருக்கும் இடையே சொத்து தொடர்பான தகராறு இருந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த மாதம் திருவிழாவுக்காக சிலைமான் அருகே பனையூர் சென்றபோது, இந்த விவகாரம் தொடர்பாக சந்தோஷுக்கும் கணேஷ், சிவகுமார் ஆகியோருக்கும் தகராறு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அப்போது சிவகுமாரை சந்தோஷ் அறிவாளால் வெட்டியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று மாலை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சந்தோஷை, கதவை உடைத்து உள்ளே நுழைந்த கும்பல் வெட்டியது. முகம், கை, கால்களில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த சமயநல்லூர் காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பினர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் சம்பவ இடத்தைப் பார்வையிட்டார். கொலைக்கான காரணம் சொத்து தகராறா அல்லது வேறு காரணமா என்பது குறித்து Madurai murder investigation நடைபெற்று வருகிறது.































