பிரஸ்ஸல்ஸ் விமான நிலையத்தில் திட்டமிடப்பட்ட அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு ஊழியர்களில் சிலர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால், காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை விமானப் போக்குவரத்து முடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 60,000 பயணிகள் பாதிக்கப்படுவார்கள் என விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பிரஸ்ஸல்ஸ் மற்றும் சார்லராயில் போக்குவரத்து பாதிப்பு
சார்லராய் விமான நிலையத்திலும் பாதிப்பு நாள் முழுவதும் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் விமான நிலையத்திற்கு வர வேண்டாம் என்றும், ரத்து மற்றும் மாற்று ஏற்பாடுகள் குறித்து விமான நிறுவனங்கள் மின்னஞ்சல், குறுஞ்செய்தி அல்லது செயலி மூலம் தகவல் தெரிவிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பிரஸ்ஸல்ஸில் மெட்ரோ ரயில் சேவையில் 1 மற்றும் 5 ஆகிய இரண்டு வழித்தடங்கள் மட்டுமே இயங்குகின்றன. டிராம் சேவைகளில் சுமார் மூன்றில் ஒரு பகுதி செயல்படுகிறது. சில பேருந்து வழித்தடங்கள் மட்டும் இயக்கப்படுகின்றன. ஃப்ளாண்டர்ஸ் பகுதியில் De Lijn சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. Belgium national demonstration-ஐ ஏற்பாடு செய்துள்ள ACV, ABVV மற்றும் Synova தொழிற்சங்கங்கள் ஊதியம், வேலைவாய்ப்பு, விலைவாசி உயர்வு மற்றும் பொது சேவைகள் தொடர்பான அரசின் கொள்கைகளை எதிர்த்து வருகின்றன.































