ஒருநாள் (ODI), டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் பல மறக்க முடியாத வெற்றிகளை பெற்றுள்ள அவர் குறிப்பாக ICC தொடர்கள் மற்றும் ஆஷஸ் போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்தை பல முக்கிய வெற்றிகளுக்கு வழிநடத்தியுள்ளார்.அவரது ஓய்வு அறிவிப்பு இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்குப் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தும் என கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நியூசிலாந்து தொடருக்கு பின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகும் பென் ஸ்டோக்ஸ்
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் மற்றும் தற்போதைய டெஸ்ட் அணித் தலைவர் பென் ஸ்டோக்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான தொடருக்குப் பின் தனது சர்வதேச கிரிக்கெட் பயணம் முடிவடையும் என அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.இந்த திடீர் அறிவிப்பு உலக கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து அணியின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றிய ஸ்டோக்ஸ் அழுத்தமான சூழ்நிலைகளில் ஆட்டத்தை மாற்றும் திறமையால் உலகளவில் புகழ்பெற்றவர்.
































