உலகம் முழுவதும் பெண்களிடையே அதிகமாக காணப்படும் புற்றுநோயாக மார்பகப் புற்றுநோய் உள்ளது. சமீபத்திய தகவல்களின் படி, ஆண்டுதோறும் 2.3 மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் புதிதாக மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.

இலங்கையிலும் இதே நிலை காணப்படுகிறது தேசிய புற்றுநோய் தடுப்பு பிரிவின் தரவுகளின்படி தினமும் சுமார் 15 புதிய மார்பகப் புற்றுநோய் நோயாளிகள் பதிவாகின்றனர் சரியான நேரத்தில் கண்டறியப்படாததால் பலர் தீவிர சிகிச்சைக்கு உட்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

மார்பகப் புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவதற்கான முக்கியமான வழிகளில் ஒன்றாக மாதம் ஒருமுறை செய்யப்படும் “360 டிகிரி” சுய பரிசோதனை குறிப்பிடப்படுகிறது. விரல்களின் உதவியுடன் மார்பகத்தின் மேல் முதல் கீழ் வரை உட்புறம் முதல் வெளிப்புறம் வரை குறிப்பாக கைகுழி (அரம்பிடை) பகுதியையும் உள்ளடக்கி முழுமையாக பரிசோதனை செய்ய வேண்டும். எந்த பகுதியும் தவறவிடப்படாத வகையில் வட்டமாகச் சுற்றி பரிசோதிப்பது அவசியம்.

மார்பகத்தில் அல்லது கைகுழியில் அசாதாரண கட்டிகள் அல்லது உறைதல் உணர்வு, தோல் நிற மாற்றம் அல்லது ஆரஞ்சு தோல் போன்ற தோற்றம், மார்பக தோலில் உள்தாழ்வு அல்லது அசாதாரண சுரப்பு போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். ஆரம்ப கட்டத்தில் கண்டறியப்பட்டால் மார்பகப் புற்றுநோய் முழுமையாக குணப்படுத்தப்படக்கூடியது என்பதும் குறிப்பிடத்தக்கது. 20 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களும் மாதந்தோறும் இந்த 360 டிகிரி சுய பரிசோதனையை மேற்கொண்டு தங்களின் ஆரோக்கியத்தையும் குடும்பத்தின் மகிழ்ச்சியையும் பாதுகாக்க வேண்டியது முக்கியமானதாகும்.

Leave a Reply

Contact NS (Nerikkalam.Info)

வணக்கம்
உங்களுடைய அவசர தேவை கருதி நீங்கள் நிரோஷ் சந்துருவை தொடர்புகொள்ள விரும்புகிறீர்கள்,

Nirosh_Santhuru

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading