தற்போதைய விதிகளின்படி பொதுவாக 22 வயதுக்கு குறைவான திருமணம் ஆகாத பிள்ளைகள் சார்ந்த பிள்ளைகளாக கருதப்படுகிறார்கள். எனினும் 22 வயதுக்கு மேற்பட்டவர்களும் சிறு வயதிலிருந்தே உடல் அல்லது மனநலக் குறைபாடு காரணமாக பெற்றோரின் நிதி ஆதரவை தொடர்ந்து சார்ந்திருந்தால் அவர்கள் Dependent Child ஆக தகுதி பெறலாம். வயது மட்டும் அடிப்படையாகக் கொண்டு விண்ணப்பம் நிராகரிக்கப்படாது.
ஸ்பான்சர் செய்யும் நபர் குறைந்தது 18 வயது நிரம்பிய கனேடிய குடியுரிமையாளர் கனடாவில் வசிக்கும் நிரந்தர வதிவிடத்தாரர் (Permanent Resident) அல்லது பதிவு செய்யப்பட்ட நபர் ஆக இருக்க வேண்டும். நிரந்தர வதிவிடத்தாரராக இருந்தால் விண்ணப்பம் பரிசீலனையில் இருக்கும் முழுக் காலமும் கனடாவில் வசிக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பதாரர் மருத்துவ பரிசோதனை காவல்துறை சான்று மற்றும் கனடா குடியேற்றச் சட்டத்தின் அனுமதித் தகுதிகளை பூர்த்தி செய்ய வேண்டும். உறவுச் சான்றுகள் உள்ளிட்ட தேவையான ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
எனவே 22 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பிள்ளைகளையும் நேரடியாக ஸ்பான்சர் செய்ய முடியாது. ஆனால் கனடா குடியேற்றச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள Dependent Child விதிவிலக்கை பூர்த்தி செய்பவர்கள் மட்டுமே இந்த வாய்ப்பைப் பெற முடியும்.
































