கனடா குடியுரிமை கட்டணம் உயர்வு – 2026 மார்ச் 31 முதல் நடைமுறையில்.
அரசு 2026 மார்ச் 31 முதல் Right of Citizenship (குடியுரிமை பெறும் உரிமைக் கட்டணம்) உயர்த்தப்பட உள்ளது என்று அறிவித்துள்ளது. இந்த மாற்றம் குடியுரிமை சேவைகளை தொடர்ந்து வழங்குவதற்கும் அதிகரித்து வரும் நிர்வாகச் செலவுகளை சமாளிப்பதற்குமான நடவடிக்கையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடா குடியுரிமை உயர்வு புதிய அறிவிப்பின் படி, வயது 18 மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் செலுத்த வேண்டிய குடியுரிமை உரிமைக் கட்டணம் $119.75 இலிருந்து $123 ஆக உயர்த்தப்படுகிறது. அதாவது $3.25 அதிகரிப்பு அமலுக்கு வருகிறது. இருப்பினும், citizenship application processing fee $530 என்ற கட்டணம் மாற்றமின்றி தொடரும் என்று அதிகாரப்பூர்வ தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கட்டணம் குடியுரிமை விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்ட பின் குடியுரிமை சான்றிதழ் வழங்கப்படும் முன் கட்டாயமாக செலுத்த வேண்டிய தொகையாகும். பொதுவாக குழந்தைகள் (18 வயதிற்குட்பட்டவர்கள்) இந்த உரிமைக் கட்டணத்திலிருந்து விலக்கு பெறுகிறார்கள்.
அரசு பொதுவாக குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகளுக்கான கட்டணங்களை காலந்தோறும் திருத்தி சேவையின் தரத்தை பராமரிக்கிறது. பணவீக்கம் மற்றும் சேவை செலவுகள் அதிகரிப்பதன் காரணமாக இத்தகைய சிறிய அளவிலான கட்டண உயர்வுகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த புதிய கட்டண உயர்வு 2026 மார்ச் 31 முதல் சமர்ப்பிக்கப்படும் அனைத்து புதிய விண்ணப்பங்களுக்கும் பொருந்தும். ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் பழைய கட்டணம் செலுத்தியிருந்தால் தேவையான வேறுபாட்டுத் தொகையை பின்னர் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படலாம்.





Leave a Reply