IRCC Canada வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி குடியேற்றம் மற்றும் குடியுரிமை விண்ணப்பங்களுக்கு ஆலோசனை அல்லது பிரதிநிதித்துவ சேவைகளை பயன்படுத்தியவர்களின் அனுபவங்களை அறிய புதிய online client experience survey தொடங்கப்பட்டுள்ளது. இந்த survey மூலம் விண்ணப்பதாரர்கள் paid அல்லது unpaid representatives பயன்படுத்திய அனுபவங்களை IRCC மதிப்பாய்வு செய்ய உள்ளது.
2025 ஆம் ஆண்டு Canada immigration, IRCC மூலம் application decision பெற்றவர்களில் சுமார் 300,000 பேருக்கு 2026 மே 19 முதல் மின்னஞ்சல் மூலம் survey invitation அனுப்பப்பட உள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்கள் random முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் survey இல் பங்கேற்பது முழுமையாக voluntary மற்றும் anonymous என்றும் IRCC தெரிவித்துள்ளது.
இந்த online survey சுமார் 11 நிமிடங்கள் ஆகும். இது English மற்றும் French மொழிகளில் கிடைக்கும். Survey-ஐ 2026 ஜூன் 12க்குள் பூர்த்தி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Survey invitation-இல் வரும் link https://ircc.qualtrics.com/jfe என தொடங்கும் என்றும் எந்த attachments-மும் இருக்காது என்றும் IRCC எச்சரித்துள்ளது.
IRCC கூறுவதன்படி, survey மூலம் கிடைக்கும் தகவல்கள் குடியேற்ற மற்றும் குடியுரிமை சேவைகளை மேம்படுத்த பயன்படுத்தப்படும். இந்த survey-க்கு வழங்கப்படும் பதில்கள் விண்ணப்பதாரர்களின் கடந்த தற்போதைய அல்லது எதிர்கால applications மீது எந்த தாக்கமும் ஏற்படுத்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
































