இந்த முடிவின்படி இனி புதிய Interest to Sponsor படிவங்களும் ஏற்கப்படாது. மேலும் புதிய விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அழைப்புகளும் அனுப்பப்படாது. இந்த நடைமுறை அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை தொடரும்.
அதே நேரத்தில் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட Sponsorship விண்ணப்பங்கள் வழக்கம்போல பரிசீலிக்கப்படும் என்று IRCC தெரிவித்துள்ளது. 2026 மற்றும் 2027 ஆண்டுகளில் Parents and Grandparents Program மூலம் ஆண்டுதோறும் 15,000 பேரை நிரந்தர குடியிருப்பாளர்களாக (Permanent Residents) அனுமதிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பெற்றோர் அல்லது தாத்தா பாட்டியை கனடாவிற்கு அழைத்து வர விரும்புபவர்கள் தற்போதைக்கு Super Visa திட்டத்தை பயன்படுத்தலாம் என்றும் அரசு நினைவூட்டியுள்ளது. Super Visa மூலம் நீண்டகாலத்திற்கு கனடாவில் தங்குவதற்கான வாய்ப்பு தொடர்ந்து கிடைக்கிறது.
இந்த மாற்றம் புதிய Sponsorship விண்ணப்பங்களை மட்டுமே பாதிக்கிறது. ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள விண்ணப்பங்கள் அல்லது முன்பே அழைப்பு பெற்றவர்கள் மீது இதனால் எந்த பாதிப்பும் இல்லை.


































