நோவா ஸ்கோஷியா மாகாணத்தின் ஸ்டெல்லர்டனில் 2026 நவம்பர் 9 அன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், குடியேற்ற அமைச்சர் லீனா மெட்லெஜ் டயாப் இந்த அறிவிப்பை வெளியிட்டார். தற்போது 14 சமூகங்கள் இந்தத் திட்டத்தில் பங்கேற்கின்றன. எதிர்காலத்தில் மேலும் சமூகங்கள் சேர்க்கப்படலாம் என அரசு தெரிவித்துள்ளது.
நிரந்தரக் குடியிருப்புக்கான தகுதிகள்
விண்ணப்பதாரர்கள், உள்ளூர் பொருளாதார மேம்பாட்டு அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடமிருந்து வேலைவாய்ப்பு offer பெற்றிருக்க வேண்டும். மேலும் பணி அனுபவம், கல்வி, அதிகாரப்பூர்வ மொழித் திறன் மற்றும் குடியேற்ற நிதி உள்ளிட்ட குறைந்தபட்ச நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
தகுதியான வேலைவாய்ப்பு மற்றும் சமூகப் பரிந்துரையைப் பெறுபவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கான, குறிப்பிட்ட முதலாளியுடன் இணைக்கப்பட்ட பணி அனுமதிக்கு தகுதி பெறலாம். அவர்களின் துணைவர் அல்லது பொதுவாழ்க்கைத் துணைக்கும், பங்கேற்கும் சமூகத்திற்குள் வேலை செய்யும் வகையிலான திறந்த பணி அனுமதி கிடைக்கலாம்.
2027ஆம் ஆண்டில் இந்தத் திட்டத்தின் கீழ் 5,500 நிரந்தரக் குடியிருப்பாளர்களை ஏற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை 2028ஆம் ஆண்டில் 6,000 ஆகவும், 2029ஆம் ஆண்டில் 6,500 ஆகவும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. Canada Rural Community Immigration Pilot திட்டத்தின் கீழ் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் தொடர்ந்து பரிசீலிக்கப்படும்.
2026 டிசம்பர் 31 அல்லது அதற்கு முன் தேதியிடப்பட்ட சமூகப் பரிந்துரையைப் பெற்றவர்கள், அது காலாவதியாகும் முன் தற்போதைய படிவங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும். 2027 ஜனவரி 1 அல்லது அதற்குப் பிறகு பரிந்துரை பெறுபவர்கள் புதிய படிவங்களைப் பயன்படுத்த வேண்டும்.
































