நிகழ்வில் நினைவுப் பலகை திரைநீக்கம் செய்யப்பட்டதுடன், மருத்துவமனை வளாகம் பார்வையிடப்பட்டது. 2017ஆம் ஆண்டு கையகப்படுத்தப்பட்ட பின்னர் நடைமுறையில் இருந்த தற்காலிக நிர்வாக முறைக்கு மாற்றாக, தற்போது புதிய கலப்பு நிர்வாகக் கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய நிர்வாக முறையில் விமானப்படை இயக்கம்
கூட்டு அமைச்சரவைப் பத்திரத்துக்கு கிடைத்த ஒப்புதலின் அடிப்படையில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான அனுர குமார திசாநாயக்கவுடன் இணைந்து இந்த அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது.
மருத்துவமனையின் உரிமை பொது திறைசேரிக்கு முழுமையாகச் சொந்தமான நிறுவனத்திடம் இருக்கும். அன்றாட நிர்வாகம் இலங்கை விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விமானப்படை பணியாளர்களுக்கான தனி மருத்துவமனைத் தேவையை நிறைவேற்றுவதுடன், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் உள்ள சுமார் 50 லட்சம் மக்களுக்கு மூன்றாம் நிலை சுகாதார சேவைகளின் பற்றாக்குறையை சமாளிக்கவும் உதவும் என தெரிவிக்கப்பட்டது.
Dr. Neville Fernando Memorial Air Force Hospital திட்டம், பயன்படுத்தப்படாத அல்லது குறைவாகப் பயன்படுத்தப்பட்ட அரச சொத்துகளை மக்களின் நலனுக்காகப் பயன்படுத்தும் அரசாங்கத் திட்டத்தின் ஓர் உதாரணமாகக் குறிப்பிடப்பட்டது. பாதுகாப்பு துணை அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகர உள்ளிட்ட பலர் நிகழ்வில் பங்கேற்றனர்.
































