Category: USA News
அமெரிக்காவின் Department of Homeland Security (DHS) புதிய வழிகாட்டுதலின் மூலம், சட்டப்பூர்வமாக நாட்டில் தங்கி இருக்கும் அகதிகளை கூட கைது செய்து தடுத்து வைக்க U.S. Immigration and Customs Enforcement (ICE) அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. முன்பு 2010 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வழிகாட்டுதலின் படி, கிரீன் கார்டு (நிரந்தர குடியிருப்பு) விண்ணப்பிக்காததற்காக மட்டும் அகதிகளை கைது செய்ய முடியாது. ஆனால் அந்த வழிகாட்டுதல் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதால், அமெரிக்காவில் ஒரு வருடம் அல்லது […]
வாஷிங்டன் – அமெரிக்காவில் இருந்து குடியேறிகளை விரைவாக அகற்றுவதை நோக்கமாகக் கொண்டு முன்னாள் ஜனாதிபர் டொனால்ட் டிரம்ப் ஆட்சி கடந்த ஆண்டு சுமார் 300 புலம்பெயர்ந்தோரை அவர்களது சொந்த நாடுகளைத் தவிர வேறு நாடுகளுக்கு நாடு கடத்துவதற்காக குறைந்தது $40 மில்லியன் செலவிட்டுள்ளது என்று செனட் வெளியுறவுக் குழுவின் ஜனநாயகக் கட்சி ஊழியர்கள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செனட் வெளியுறவுக் குழு தலைவர் சென். ஜீன் ஷாஹீன் தலைமையிலான ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள், இந்த மூன்றாம் நாடு […]
ஓமானில் நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையில் மோதல் ஏற்படும் என்ற அச்சம் மத்தியில், இரு நாடுகளின் மூத்த அதிகாரிகள் தொடர்ந்து விவாதங்களை நடத்தியுள்ளனர் என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார். மத்தியஸ்த பேச்சுவார்த்தைகள் ஒரு “நல்ல தொடக்கம்” என்றும், “பிரத்தியேக அணுசக்தி” தொடர்பிலும் முதன்மை ஆலோசனைகள் நடைபெற்றுள்ளதாக கூறிய அவர், பேச்சுவார்த்தையாளர்கள் தற்போது தங்கள் தலைநகரங்களுக்குத் திரும்பி ஆலோசனைகளுக்கு சென்றிருப்பதாக குறிப்பிட்டார். பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, அமெரிக்க அதிகாரிகள் ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் பிராந்திய […]
கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு முன்பு இரண்டு அமெரிக்க வீரர்கள் மற்றும் ஒரு மொழிபெயர்ப்பாளரின் மரணத்தைத் தொடர்ந்து, அமெரிக்கத் தலைவர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) மீது இராணுவ நடவடிக்கையை அறிவித்தார். இந்த தாக்குதலில் பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்த குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டனர். டெய்ர் எஸ்-சோர் மாகாணத்தில், “ட்ரோன்களுக்கு பொறுப்பான கலத் தலைவர் உட்பட” ஐந்து பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் (SOHR) தெரிவித்தது. டிரம்ப், Truth Social இல் கூறியதாவது, […]
அமெரிக்காவில் உக்ரைன் போரில் இருந்து தப்பிச் சென்றவர்களுக்கு வழங்கப்பட்ட மனிதாபிமுக அனுமதி திட்டம் (Uniting for Ukraine) தொடர்பான முடிவு டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தால் தாமதிக்கப்பட்டதால், தற்போது சுமார் 2.6 இலட்சம் உக்ரைனியர்கள் கடுமையான சட்ட மற்றும் வாழ்வாதார சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த தாமதம் காரணமாக 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அவர்களின் சட்ட அனுமதி மற்றும் வேலை அனுமதியை இழக்கும் ஆபத்தில் உள்ளனர். ப்ளோரிடாவில் ரிட்ஸ்-கார்ல்டன் ஹோட்டலில் மேலாளராக பணியாற்றிய 35 வயதான கதரினா கோலிஸ்ட்ரா […]
அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில், மனிதர்களில் இதுவரை பதிவாகாத புதிய பறவைகள் காய்ச்சல் (H5N5) வைரஸ் காரணமாக ஒருவரின் மரணம் நிகழ்ந்துள்ளது என்று மாநில சுகாதாரத் திணைக்களம் வெள்ளிக்கிழமை (22) தெரிவித்தது. மரணமடைந்தவர் வயதானவர் மற்றும் முன்னர் பல உடல் நல பிரச்சனைகளைக் கொண்டவராக இருந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அமெரிக்காவில் மனிதர்களில் பறவைகள் காய்ச்சலால் ஏற்பட்ட மரணம் இது இரண்டாவது பதிவாகும் சம்பவமாகும். கடைசியாக மனிதர்கள் பாதிக்கப்பட்ட சம்பவம் ஒன்பது மாதங்களுக்கு முன்பு ஏற்பட்டதாகவும் […]
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ இணைந்து நடத்தும் 2026 உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றுகள் இறுதிக்கட்டத்தை நோக்கி செல்லும் நிலையில், பல கண்டங்களிலிருந்து அணிகள் தங்கள் இடத்தை உறுதி செய்துள்ளன. இந்தப் பதிப்பில் மொத்தம் 48 நாடுகள் பங்கேற்கின்றன. ஐரோப்பா (UEFA) – 16 இடங்கள் இன்றைய நிலவரப்படி தங்கள் தகுதியை உறுதி செய்த அணிகள் இன்னும் சில அணிகள் play-off மூலம் தீர்மானிக்கப்படும். ஆப்பிரிக்கா (CAF) – 9 அல்லது 10 இடங்கள் தகுதி பெற்ற […]
அமெரிக்கா, கென்டக்கியில் இடம்பெற்ற பயங்கரமான UPS சரக்கு விமான விபத்தில் குறைந்தது 14 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, உலகின் முன்னணி சரக்கு விநியோக நிறுவனங்களான UPS மற்றும் FedEx தங்களது சில சரக்கு விமானங்களை தற்காலிகமாக தரையில் நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளன. செவ்வாய்க்கிழமை காலை லூயிஸ்வில் சர்வதேச விமான நிலையத்தில் புறப்பட முயன்ற UPS நிறுவனத்தின் MD-11F வகை சரக்கு விமானம், பறக்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அருகிலிருந்த வணிக நிறுவனங்களுடன் மோதி மாபெரும் தீப்பரவலுக்கு காரணமானது. விபத்தில் […]
அமெரிக்க மின்சார வாகன நிறுவனம் டெஸ்லா (Tesla) தனது ஆண்டு பங்குதாரர் கூட்டத்தில், தலைமை நிர்வாக அதிகாரி ஈலான் மஸ்க்கிற்கு (Elon Musk) வழங்கப்படவுள்ள மிகப்பெரிய ஊதியத் திட்டத்தை 75%க்கும் மேற்பட்ட பங்குதாரர்கள் ஆதரித்து அங்கீகரித்துள்ளனர். இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், உலகின் செல்வந்தரான மஸ்க், உலகின் முதல் டிரில்லியனராக (Trillionaire) மாறக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மஸ்க் தற்போது நிறுவனத்தின் 15% பங்குகளை வைத்திருப்பவர். புதிய திட்டத்தின் கீழ், அவர் சம்பளம் எதுவும் பெறவில்லை என்றாலும், […]
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், ஜனவரி 20 ஆம் தேதி பதவியேற்றதிலிருந்து இதுவரை சுமார் 80,000 இடைநிலை (Non-Immigrant) விசாக்கள் ரத்துசெய்துள்ளது என்று அமெரிக்க அரசுத்துறையின் உயர்நிலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விசா ரத்துக்கான முக்கியக் காரணங்களில் மது அருந்தி வாகனம் ஓட்டுதல் (DUI), தாக்குதல், திருட்டு உள்ளிட்ட சட்ட மீறல்கள் அடங்கும்.இதில் 16,000 விசாக்கள் மது அருந்தி வாகனம் ஓட்டிய வழக்குகளுக்கும், 12,000 தாக்குதல் சம்பவங்களுக்கும், 8,000 திருட்டு வழக்குகளுக்கும் தொடர்புடையவை என […]