சட்ட மற்றும் தூதரக நடவடிக்கைகள் முன்னெடுப்பு
சவுதி அரேபிய மேல்முறையீட்டு நீதிமன்றம், நபிகள் நாயகம் முஹம்மதை அவமதிப்பதாகக் கருதப்பட்ட Facebook கருத்து தொடர்பில் அனோஜனுக்கு மரண தண்டனை விதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனோஜனுக்கு உதவ இலங்கை அரசு சட்டரீதியான மற்றும் தூதரக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அதே நேரத்தில், சவுதி அரசிடம் கருணை அல்லது தண்டனைக் குறைப்பைப் பெறுவதற்கான வாய்ப்புகளும் ஆராயப்படுகின்றன.
Sivarasa Anojan death sentence விவகாரம் குறித்து அமைச்சரவை ஊடக சந்திப்பில் பேசிய அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, மேல்முறையீடு செய்வது தொடர்பாக அனோஜனின் குடும்பத்தினருடன் அரசு ஆலோசித்து வருவதாக தெரிவித்தார். அரசாங்கம் தூதரக வழிகளையும் இணையாக பரிசீலித்து வருவதாகவும் அவர் கூறினார்.






























