ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஸ்வீடன் பாதுகாப்பு அமைப்புகள் இணைந்து நடத்திய நடவடிக்கையில் இந்த கைது நடந்தது. ஸ்வீடனில் ஒரே நேரத்தில் அந்தக் கும்பலைச் சேர்ந்த மேலும் ஆறு பேர் கைது செய்யப்பட்டதாக அமீரக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கிரிப்டோ பரிவர்த்தனைகள் மூலம் நிதி தடம் கண்டறிதல்
அந்தக் குற்ற வலையமைப்பு 10 மாதங்களில் சுமார் 70 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனா, அதாவது 26.5 மில்லியன் திர்ஹம் மதிப்பிலான நிதியை கையாண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. குற்றச் செயல்களில் கிடைத்த பணத்தை ரொக்கமாக பரிமாறி, பிற குற்றக் குழுக்களுக்கு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
கிரிப்டோகரன்சி வழியாகவும் பணத்தின் மதிப்பு மாற்றப்பட்டு நகர்த்தப்பட்டுள்ளது. கிரிப்டோ பரிவர்த்தனைகள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களின் ஆய்வு, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் ஒப்பந்தக் கொலைகள் உள்ளிட்ட பிற குற்றச் செயல்களுடன் நிதித் தொடர்புகளை வெளிப்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
UAE arrests Swedish gang leader நடவடிக்கையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், நீண்ட தேடுதல், விசாரணை மற்றும் கண்காணிப்புக்குப் பிறகு அவரது இருப்பிடம் கண்டறியப்பட்டது. கைது செய்யப்பட்டவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
சர்வதேச ஒத்துழைப்பு இந்த நடவடிக்கையின் வெற்றிக்கு முக்கிய காரணம் என ஸ்வீடன் காவல்துறை அதிகாரி ஆண்டர்ஸ் விப்பெர்க் தெரிவித்தார். குற்ற வலையமைப்புகளின் நிதி ஆதாரங்களைத் தடுக்கும் பணியைத் தொடர்வதாக அமீரக உள்துறை அதிகாரி பிரிகேடியர் அப்துல்அசீஸ் அல் அகமது கூறினார்.
பணமோசடி, பயங்கரவாத நிதியுதவி மற்றும் தொடர்புடைய குற்றங்களை எதிர்கொள்ள அமீரகம் தனது அமைப்புகளை மேம்படுத்தி வருகிறது. ஏப்ரலில், நிதிப் புலனாய்வு மற்றும் பணமோசடி விசாரணைகளுக்கான தேசிய வழிகாட்டி ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதில் சொத்துகளைத் தடயமறிந்து பறிமுதல் செய்தல், சொத்து மீட்பு மற்றும் மெய்நிகர் சொத்துகள் தொடர்பான நடைமுறைகள் இடம்பெற்றுள்ளன.































