மாவட்டங்கள் மற்றும் கடற்பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு
வடமேற்கு மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும். ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை குறைக்க பொதுமக்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு முதல் அம்பாந்தோட்டை வரை, கொழும்பு மற்றும் காலி ஊடாக நீளும் கடற்பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம். Sri Lanka weather forecast எச்சரிக்கையின்படி, அம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கலாம். அந்தக் கடற்பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகவும், காலி முதல் அம்பாந்தோட்டை மற்றும் புத்தளம் முதல் காங்கேசன்துறை வரையிலான பகுதிகள் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும்.































