டெல்லியின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஸ்வரூப் நகர், குஷாக் சாலை அருகே ஜெய்பால் ராணாவின் வயல் பகுதியில் கடந்த 13ஆம் தேதி சிறுமியின் சிதைந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டது. உடலின் சில பகுதிகளை தெருநாய்கள் கடித்திருந்தன. ஒரு கை உடலில் இருந்து பிரிந்த நிலையில் இருந்தது.
50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு
உடல் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
நேரில் கண்ட சாட்சிகள் இல்லாததால், போலீஸார் அப்பகுதியில் இருந்த 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனர். சம்பவ இடம் அருகே டெம்போ ஒன்று சென்றது பதிவுகளில் தெரியவந்தது. இருள் காரணமாக அதன் பதிவு எண் தெளிவாகத் தெரியவில்லை.
தொடர்ந்து பல கேமராக்களின் காட்சிகள் மூலம் டெம்போவின் நடமாட்டத்தை கண்காணித்த போலீஸார், இரவு முழுவதும் தேடுதல் நடத்தினர். பின்னர் டெம்போவை கண்டுபிடித்து, அதன் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினர். இதன் அடிப்படையில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிறுமியும் குற்றம் சாட்டப்பட்டவர்களும் ஒருவரையொருவர் அறிந்தவர்கள் என போலீஸார் கூறினர். சம்பவத்தின்போது சிறுமி அவர்களுடன் டெம்போவில் பயணித்ததாகவும், நால்வரும் மது அருந்திய பின்னர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, கத்தியால் குத்திக் கொலை செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தினர் சிறுமி காணவில்லை என புகார் அளிக்கவில்லை; அவர் சில நாட்கள் வீட்டை விட்டு வெளியேறி பின்னர் திரும்புவது வழக்கம் என கூறியுள்ளனர். இந்த Delhi minor girl murder case குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.































