வடமேற்கு டெல்லியின் ஸ்வரூப் நகர் பகுதியில், ஜெய்பால் ராணாவின் வயல் அருகே சிறுமியின் சிதைந்த உடல் கடந்த 13ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டது. உடலின் சில பகுதிகளை தெருநாய்கள் கடித்திருந்தன. ஒரு கை உடலிலிருந்து நாய்களால் அகற்றப்பட்டிருந்தது. அழுகிய நிலையில் இருந்த உடலை மீட்ட போலீஸார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு
பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதும், கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்கப்பட்டது.
நேரில் கண்ட சாட்சிகள் இல்லாததால், போலீஸார் 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். சம்பவ இடம் அருகே சென்ற டெம்போ ஒன்று பதிவுகளில் சிக்கியது. இருள் காரணமாக அதன் பதிவு எண் தெளிவாகத் தெரியவில்லை. தொடர்ந்து அதன் இயக்கத்தை கண்காணித்த போலீஸார், இரவு முழுவதும் தேடி டெம்போவையும் ஓட்டுநரையும் கண்டுபிடித்தனர்.
ஓட்டுநரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் சுபம் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். சுபத்தைத் தவிர மற்ற மூவரும் மைனர்கள். சிறுமியும் குற்றம் சாட்டப்பட்டவர்களும் ஒருவரையொருவர் அறிந்தவர்கள் என்றும், சம்பவத்தின்போது அவர் அவர்களுடன் டெம்போவில் பயணித்ததாகவும் போலீஸார் கூறினர். நான்கு பேரும் மது அருந்திய பின்னர் குற்றத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமியை காணவில்லை என குடும்பத்தினர் புகார் அளிக்கவில்லை. அவர் அடிக்கடி வீட்டை விட்டு வெளியேறி சில நாட்களுக்குப் பிறகு திரும்புவார் என்று குடும்பத்தினர் தெரிவித்ததாக போலீஸார் கூறினர். Delhi minor girl murder case விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.































