சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், ஜனவரி 20 ஆம் தேதி பதவியேற்றதிலிருந்து இதுவரை சுமார் 80,000 இடைநிலை (Non-Immigrant) விசாக்கள் ரத்துசெய்துள்ளது என்று அமெரிக்க அரசுத்துறையின் உயர்நிலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விசா ரத்துக்கான முக்கியக் காரணங்களில் மது அருந்தி வாகனம் ஓட்டுதல் (DUI), தாக்குதல், திருட்டு உள்ளிட்ட சட்ட மீறல்கள் அடங்கும்.இதில் 16,000 விசாக்கள் மது அருந்தி வாகனம் ஓட்டிய வழக்குகளுக்கும், 12,000 தாக்குதல் சம்பவங்களுக்கும், 8,000 திருட்டு வழக்குகளுக்கும் தொடர்புடையவை என கூறப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை டிரம்ப் ஆட்சியிலிருந்து அமல்படுத்தப்பட்ட கடுமையான குடியேற்றக் கொள்கைகளின் ஒரு பகுதியாகும்.மேலும் விசா வழங்கும் செயல்முறைகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. இதில் சமூக ஊடக கணக்குகள் பரிசோதனை மற்றும் விரிவான பாதுகாப்புச் சோதனைகள் அடங்கும்.அதுதவிர, மாணவர் விசா மீறல்களுக்காகவே 6,000 க்கும் மேற்பட்ட விசாக்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், சிலர் “தீவிரவாத ஆதரவு” குற்றச்சாட்டில் விசா ரத்துக்கு உள்ளானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ அமெரிக்காவின் வெளிநாட்டு கொள்கைக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் பல்வேறு நபர்களின் விசாக்களும் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் பாலஸ்தீன ஆதரவு அல்லது இஸ்ரேலின் காசா நடவடிக்கைகளை விமர்சித்த மாணவர்கள் மற்றும் கிரீன் கார்டு வைத்திருப்போரும் “அது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு பிரச்சினை ஏற்படுத்தும்” எனக் கூறி நாடுகடத்தப்படலாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading