ஈரான் போர் நிறுத்தம் – தேவைப்பட்டால் மீண்டும் தாக்குதல் – டிரம்ப்.
அமெரிக்கா ஈரானில் நடைபெற்று வரும் ராணுவ நடவடிக்கைகளில் இருந்து மிக விரைவாக விலகலாம் ஆனால் தேவையானால் மீண்டும் குறிவைத்த தாக்குதல்களுக்கு திரும்ப தயாராக இருப்பதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ராய்ட்டர்ஸுக்கு வழங்கிய பேட்டியில் அவர் போர் நீண்ட காலம் தொடர வேண்டாம் என்பதில் அமெரிக்க மக்களிடையே அழுத்தம் அதிகரித்து வருவதாகவும் கூறினார். மேலும் ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கும் முயற்சியை தடுக்கவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.
இதற்கிடையில போருக்கு முடிவு காணும் முயற்சியாக மறைமுக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சில நாடுகள் நடுநிலைமை வகித்து அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க முயற்சி செய்கின்றன. அதே நேரத்தில் ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) பாதுகாப்பு மற்றும் எண்ணெய் போக்குவரத்து தொடர்பான பதற்றம் உலக பொருளாதாரத்தையும் பாதித்து வருகிறது.
ஈரான் போர் நிறுத்தம் கோரி முன்வந்ததாக டிரம்ப் கூறியிருந்தாலும் அந்த தகவலை ஈரான் மறுத்துள்ளது. எனினும் உலக சந்தைகளில் எண்ணெய் விலை மாற்றம் மற்றும் அரசியல் அழுத்தம் காரணமாக இந்த மோதல் விரைவில் முடிவடையலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!
WhatsApp / Call: +94 76 572 9042













Leave a Reply