2025 வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைவாக நிறுவன ரீதியான பராமரிப்பில் இருந்து சமூகத்திற்குத் திரும்பும் குறைந்த வருமானம் கொண்ட தம்பதியினருக்கு வீட்டு வசதிகளை வழங்கும் நோக்கில் “திவியட்ட சவியக்” வீடமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை 18-08-2025 அன்று நடைபெற்ற கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மேலும், 2026 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் வீடமைப்புத் திட்டம் 2,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒரு பயனாளருக்கு அதிகபட்சமாக 2 மில்லியன் ரூபா வரை நிதியுதவி வழங்கப்படும் வகையில் திட்டம் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் எந்தவொரு காலப்பகுதியிலும் சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் தங்கியிருந்து பின்னர் சமூகத்துடன் ஒருங்கிணைந்தவர்கள் மற்றும் ஆபத்தில் உள்ள குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள் காணி வாங்குதல் காணி வாங்கி வீடு கட்டுதல், சொந்த காணியில் வீடு கட்டுதல் வீடு வாங்குதல் மற்றும் தற்போதுள்ள வீட்டைப் புனரமைத்தல் போன்ற தேவைகளுக்காக நிதியுதவியைப் பெற முடியும்.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சரின் பரிந்துரையின் அடிப்படையில் 18 வயது அல்லது அதற்கு முன்னர் நிறுவன பராமரிப்பில் இருந்து வெளியேறிய தற்போது 45 வயதுக்குட்பட்ட மற்றும் பாதுகாப்பான தங்குமிடம் இல்லாத நபர்கள் நிலையான குடும்ப பின்னணி இல்லாத காரணத்தினால் பாதுகாப்பற்ற சூழலில் வாழும் குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள் மேலும் தற்போது நிறுவன பராமரிப்பில் உள்ள 16 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்டும் சமூகத்துடன் மீண்டும் இணைவதில் சிரமம் காரணமாக சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் தங்கியிருக்கும் இளைஞர்கள் ஆகியோர் இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற தகுதியானவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.






























