தாயுயுவான் செயற்கைக்கோள் ஏவுதல் மையம் (Taiyuan Satellite Launch Center) மேற்கொண்ட இந்த ஏவுதலில், லாங் மார்ச்-11 (Long March-11) ஏவுகணை மூலம் மூன்று ஷியான்-32 (Shiyan-32) பரிசோதனை செயற்கைக்கோள்கள் காலை 5.01 மணிக்கு (பீஜிங் நேரம்) விண்ணில் ஏவப்பட்டன.
அனைத்து செயற்கைக்கோள்களும் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட சுற்றுப்பாதையில் (orbit) வெற்றிகரமாக நுழைந்துள்ளன என்று சீனாவின் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த செயற்கைக்கோள்கள் முக்கியமாக விண்வெளி தொழில்நுட்ப பரிசோதனைகள் மற்றும் ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்படவுள்ளன.
இந்த வெற்றிகரமான ஏவுதல், சீனாவின் லாங் மார்ச் ராக்கெட் தொடர் ஏவுதல்களின் வரலாற்றில் 606வது பறக்கும் பணி (flight mission) ஆகும்.
































