ஆனால் உள்ளூர் மக்களின் எதிர்ப்பு தவறான தகவல்கள் மற்றும் துயரத்தில் உள்ள குடும்பங்களின் கோபம் காரணமாக நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் சவாலாக மாறியுள்ளன. கடந்த சில நாட்களாக காங்கோவில் எபோலா சிகிச்சை மையங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதுடன் ஒரு மையம் தீவைக்கப்பட்டதில் பல சந்தேக நோயாளிகள் தப்பிச் சென்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய எபோலா பரவல் கட்டுப்படுத்த கடினமான “Bundibugyo” வகை வைரஸால் ஏற்படுவதாக கூறப்படும் நிலையில் உலக சுகாதார அமைப்பு காங்கோவுக்கான அபாய நிலையை “மிக உயர்வு” என மதிப்பிட்டுள்ளது.
எபோலா நோயாளிகளின் உடல்களை கோரி மருத்துவமனைக்குள் புகுந்த இளைஞர்கள் – காங்கோவில் பதற்றம்
காங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்கு பகுதியான மொங்க்ப்வாலு (Mongbwalu) நகரில் எபோலா நோயாளிகள் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனைக்குள் இளைஞர்கள் குழுவொன்று வலுக்கட்டாயமாக நுழைந்து உயிரிழந்த தங்களது உறவினர்களின் உடல்களை ஒப்படைக்க வேண்டும் எனக் கோரி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச் சூடு மற்றும் குழப்பநிலையால் மருத்துவ ஊழியர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எபோலா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடல்கள் மிகுந்த தொற்றுத்தன்மை கொண்டதால் அவற்றை சுகாதார நெறிமுறைகளின்படி பயிற்சி பெற்ற குழுக்கள் மட்டுமே அடக்கம் செய்ய வேண்டும் என சுகாதார அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.

































