அதன்படி ஜனாதிபதியால் நிர்ணயிக்கப்படும் திகதி மற்றும் நேரத்தில் பிரதிவாதியை உயிர் பிரியும் வரை தூக்கிலிட்டு மரண தண்டனையை நிறைவேற்றுமாறு உத்தரவிடப்பட்டது. மரண தண்டனை விதிக்கப்பட்டவர் எப்பாவல பகுதியைச் சேர்ந்த அரச வைத்தியசாலை சுகாதார உதவியாளர் டபிள்யூ.டி. தேவாநந்த என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் 2014 மே மாதம் எப்பாவல 20 ஏக்கர் பகுதியில் பெலிகலவைச் சேர்ந்த பி. மகிந்த குமார என்பவரை கொலை செய்ததாக இலங்கை தண்டனைச் சட்டக்கோவையின் 296 ஆவது பிரிவின் கீழ் சட்டமா அதிபரால் வழக்கு தொடரப்பட்டிருந்தது. தம்புத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் ஆரம்பக்கட்ட விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் அநுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட இந்த வழக்கில் நீண்டகால விசாரணைகளின் பின்னர் இன்று இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.



























