மேலும் மலையக மக்கள் உட்பட நாட்டின் அனைத்து சமூகங்களும் தேசிய முன்னேற்றத்தின் முக்கிய பங்காளிகள் எனக் குறிப்பிட்ட அவர் பொருளாதார மற்றும் சமூக ரீதியாக நாட்டை மீளக் கட்டியெழுப்பும் பணியில் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என அழைப்பு விடுத்தார். சமத்துவம், ஒற்றுமை மற்றும் கல்வி முன்னேற்றம் ஆகியவற்றின் ஊடாக நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
அனைவருக்கும் சம அங்கீகாரம் வழங்குவதே அரசின் இலக்கு
எமது அரசாங்கத்தின் முக்கிய இலக்கு இந்த நாட்டில் வாழும் அனைவரும் சமத்துவமாக அங்கீகரிக்கப்பட்டு சம உரிமைகளுடன் வாழக்கூடிய சூழலை உருவாக்குவதாக கொழும்பு மாநகர சபை மேயர் விராய் கெலி பல்தசார் தெரிவித்துள்ளார். கொழும்பு சினமன் லேக் ஹோட்டலில் நடைபெற்ற மலையக கல்வி மன்றத்தின் 20ஆவது ஆண்டு நிறைவு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய அவர் நாட்டின் அனைத்து மக்களும் இன, மத, மொழி பேதமின்றி ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.
































